புனே: Indus Battle Royale எனும் புதிய ஆக்‌ஷன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பப்ஜி கேமுக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சூப்பர் கேமிங் எனும் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த புதிய கேமின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
கடந்த 2020 வாக்கில் இந்தியாவில் பப்ஜி உட்பட பல்வேறு சீன செயலிகள் முடக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து கடந்த 2021-ல் 'இந்திய பப்ஜி' என சொல்லப்படும் Battlegrounds Mobile India கேம் அறிமுகம் செய்யப்பட்டது. இதை தென்கொரிய நிறுவனமான கிராஃப்டன் வடிவமைத்தது. இருந்தும் கடந்த 2022, ஜூலையில் இந்திய பயனர்களால் இந்த கேமை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அக்சஸ் செய்ய முடியாத வகையில் முடக்கப்பட்டது. பப்ஜி முடக்கப்பட்ட அதே தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் இந்த கேமையும் இந்திய அரசு முடக்கியதாக சொல்லப்பட்டது.
Indus Battle Royale எனும் புதிய ஆக்ஷன் கேம் இந்தியாவில் முன்பதிவுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பப்ஜி கேமுக்கு மாற்று என சொல்லப்படுகிறது. இந்தியாவை சேர்ந்த சூப்பர் கேமிங் எனும் நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த புதிய கேமின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
செய்திப்பிரிவு