சண்டிகர்: எதிர்வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பசு மாடுகளை கட்டிப் பிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் உலகம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டாடும் சூழலில் இதைச் செய்யுமாறு அந்த வாரியம் அறிவிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனை Cow Hug Day என வாரியம் சொல்லியுள்ளது.
கடந்த 6-ம் தேதி வெளியான அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள விலங்குகள் நல வாரியம், பசுவின் மகத்தான நலனை கருத்தில் கொண்டு இதை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எதிர்வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பசு மாடுகளை கட்டிபிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் உலகம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டாடும் சூழலில் இதை செய்யுமாறு வாரியம் அறிவிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது.
Authour: செய்திப்பிரிவு