92 வயதில் 5வது திருமணம் செய்யும் ரூபர்ட் மர்டாக்; ! உளவியலை விளக்கும் மருத்துவர்!

6

ஊடகத்துறை ஜாம்பவான் ரூபர்ட் முர்டாக், தனது 92வது வயதில் ஐந்தாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இந்த வயதில் திருமணம் செய்வதன் பின்னணியில் உள்ள உளவியல் குறித்து பாலியல் சிகிச்சை மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.

பிரபல ஃபாக்ஸ் கார்ப் (Fox corp) ஊடக நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான ரூபர்ட் முர்டாக் (Rupert Murdoch), விரைவில் தான் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். இவருடைய தற்போதைய வயது 92. அன் லிஸ்லி ஸ்மித் (Ann Lesley Smith) என்னும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், திருமணம் இன்னும் சில மாதங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rupert Murdoch, Ann Lesley Smith

அன் லிஸ்லி ஸ்மித் 66 வயது பெண்மணி. இவர், இதற்கு முன்பு செஸ்டர் ஸ்மித் என்னும் பாடகரை மணந்துள்ளார். செஸ்டர் இறந்த பின்பு 14 வருடங்களாக தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அன் மற்றும் ரூபர்ட் சந்தித்துள்ளனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். ருபர்ட்டுக்கு ஏற்கெனவே நான்கு முறை‌ திருமணமாகிம, ஆறு குழந்தைகள் உள்ளனர். தன்னுடைய நான்காவது மனைவியை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 92 வயதில் அதுவும் ஐந்தாவது முறையாக திருமணம் செய்து கொள்வதற்கான காரணம் காதலாக இருக்குமா என்பது பற்றி மருத்துவர் காமராஜிடம் கேட்டோம்… “மிகவும் வயதானவர்கள் திருமணம் செய்து கொள்வது, அதுவும் பிரபலமானவர்கள் திருமணம் செய்து கொள்வதை உலகம் முழுவதிலும் பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் காமம்தான், காதல்தான் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.

சில சந்தர்ப்பங்களில் காமத்துக்காககூட வயதானவர்கள் மிகவும் இளம்பெண்களை திருமணம் செய்துகொள்வது நடக்கிறது. இந்த வகை திருமணங்களை அரபு நாடுகளில் அதிகம் பார்க்கலாம். அது போன்ற சூழலில் பெரிதாக பெண்ணை பார்த்து, பேசி பழகியெல்லாம் இருக்க மாட்டார்கள். திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகவே இளம்பெண்களைத் திருமணம் செய்பவர்களும் இருக்கிறார்கள்.

பாலியல் மருத்துவர் காமராஜ்

எந்த வயதாக இருந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் வரை தாம்பத்திய உறவு கொள்ளலாம். அதிகம் வயதாகும்போது தாம்பத்திய உறவு கொள்வது கொஞ்சம் சிரமமாக இருக்கலாம். வயது அதிகரிக்கும்போது குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பும் குறைவு.

ஆனால் வயதான காலத்தில் காதலுக்காக நடக்கும் திருமணங்களும் இருக்கின்றன. வயதானாலும் ஒருவரை ஒருவர் பார்த்து, பேசி புரிந்து கொண்டு இருவரின் மனமும் ஒன்றிணைவதால் திருமணம் செய்து கொள்வார்கள். இது காமத்துக்கு அப்பாற்பட்டு இருக்கலாம். இன்னும் சில திருமணங்களில் காதல், காமம் இரண்டுமே இருக்கலாம்” என்றார்.

 

Author: செ. சுபஸ்ரீ

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.