இன்றைய ஷேர் ஆட்டோ போல, அக்காலத்தில் ஏழை, நடுத்தர மக்களின் போக்குவரத்து சுமையைக் குறைத்ததில் பெரும் பங்கு வகித்தவை குதிரை வண்டிகள்! வெகுஜன மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாகப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த குதிரை வண்டிகள், 90களுக்குப் பிறகு படிப்படியாக மறைந்துவிட்டன. இப்போது ஏதோ ஒரு சில சுற்றுலா தளங்களில் மட்டும் குதிரை வண்டிகளைப் பார்க்க முடிகிறது.
'டொக்… டொக்… டொக்…' எனத் தார்ச் சாலையில் ஒலி எழுப்பிச் செல்லும் குதிரை வண்டிகளை 90ஸ் காலக்கட்ட மக்களால் எளிதில் மறக்க முடியாது. வெகு அரிதாகச் சில குதிரை வண்டிகளில் டிரான்ஸிஸ்டர்கள் கொண்டு பாடல் ஒலி பரப்புவார்கள். குதிரைகளின் கால்குளம்பு லயத்துக்கும், பாடல்களின் தாள லயத்துக்கும், நமது உடல் குலுங்கும் ஆட்டத்திற்கும் அப்படி ஒரு பொருத்தம் இருக்கும்!
இன்றைய ஷேர் ஆட்டோ போல, அக்காலத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் போக்குவரத்து சுமையைக் குறைத்ததில் பெரும் பங்கு வகித்தவை குதிரை வண்டிகள்! வெகுஜன மக்களின் முக்கிய போக்குவரத்து வசதியாகப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த குதிரை வண்டிகள், 90களுக்குப் பிறகு படிப்படியாக மறைந்துவிட்டன.
Authour: டாக்டர் வி.விக்ரம்குமார்