சென்னை: அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பாஜக அரசு பறித்ததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சி ரீதியிலான 76 மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ஒற்றுமை பயணம் மூலம் மக்களின் பேராதரவைப் பெற்று, எதிர்க்கட்சிகளின் உரிமைக்குரலாக ஒலித்த தலைவர் ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கடுமையான அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறது. பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் இருக்கும் உறவு குறித்து குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி, தொடர்ந்து கூறி வருகிறார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பாஜக அரசு பறித்ததைக் கண்டித்து மாநிலம் முழுவதும் கட்சி ரீதியிலான 76 மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு இன்று அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு