மதுரை: தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மதுரையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர் வழங்க வேண்டும். சத்துணவு – அங்கன்வாடி ஊழியர்கள் , வருவாய் கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய பணியாளர்களை, சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களாக நிரந்தரப்படுத்தி, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தமிழக அரசில் உள்ள 6 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மதுரையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
Author: சுப. ஜனநாயகசெல்வம்