புதுடெல்லி: கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, கேரளா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், “6 மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவல் அதிகரித்திருக்கிறது. எனவே பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். கரோனா தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று சற்று அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு