சென்னை: "நொச்சிக்குப்பம் மீனவர்களுக்காக, நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணியானது ஆறு மாதத்தில் முடிவடையும்" என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு மீனவர்கள் நலனிலும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதிலும் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. சென்னை மெரினா கடற்கரை நொச்சிக்குப்பம் லூப் சாலையில் மீனவர்கள் நலனுக்காக போக்குவரத்திற்கு இடையூறின்றி செல்லும் வகையிலும், பொதுமக்கள் எளிதாக மீன்கள் வாங்கிச் செல்லும் வகையிலும் சென்னை மாநகராட்சியால் ரூபாய் 10 கோடி மதிப்பில் நவீன மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.
நவீன மீன் மார்க்கெட்டில் 384 கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளுக்கு வந்து செல்லும் மக்களின் வசதிக்காக 60 நான்கு சக்கர வாகனங்களும், 155 இருசக்கர வாகனங்களும் நிறுத்துவதற்கு இட வசதி செய்யப்பட்டுள்ளது. என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு