சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று பேரவையில் விளக்கம் அளித்தார். அதில், வருங்காலத்தில் இந்த நிலை வராமல் தவிர்ப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்நாள் நடைபெற்ற மொழித் தேர்வை 50,000 மாணவர்கள் எழுதவில்லை. இது குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். இதில் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளித்தார். அதில், "இந்த 50 ஆயிரம் மாணவர்கள் எங்கே போனார்கள் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது. கரோனா காலம் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனாவிற்கு பிறகு பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் நாளில் நடந்த மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேரவையில் விளக்கம் அளித்தார்.
Author: செய்திப்பிரிவு