Advertisement
கிருஷ்ணகிரி: சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்கிற நீண்டக்கால கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் 500க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதேபோல் சூளகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில விவசாயம், கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணகிரி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஓட்டியுள்ள சூளகிரி தாலுகா நாளுக்கு, நாள் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று வருகிறது.
சூளகிரியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்கிற நீண்டக்கால கோரிக்கையை நிறைவேற்றிட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Author: எஸ்.கே.ரமேஷ்
Advertisement