சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தொகுதி பார்வையாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த மார்ச் 22-ம் தேதி நடந்தது. இதில், 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தொகுதி பார்வையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டு, அவர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, பார்வையாளர்கள் முதல் ஆலோசனைகூட்டம் கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் கடந்த மார்ச் 31-ம் தேதி காணொலி மூலம் நடந்தது. இந்நிலையில், தொகுதி பார்வையாளர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. காணொலி மூலம் நடந்த இக் கூட்டத்தில் 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய தொகுதி பார்வையாளர்கள் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு