சென்னை: “தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாற்றும் நோக்குடன் நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்தப் போராட்டமே தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பாஜகவினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை என்று தமிழக காங்கிரஸ் கே.எஸ்.அழகிரி சாடியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "சமீபத்தில் கும்பகோணம் ரயில் நிலையத்தில் சோழன் விரைவு தொடர் வண்டி முன்பாக எனது தலைமையில் நடைபெற்ற மறியல் ஆர்ப்பாட்டம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட சிலர் விமர்சனம் செய்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 23-ம் தேதி காலையில் அரியலூர் மாவட்டம், டி.பழுரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு காலை 11 மணியளவில் காங்கிரஸ் நண்பர்களோடு வந்து சேர்ந்தேன். அப்போது அங்கிருந்த ஓய்வு அறையில் பத்திரிகையாளர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய செய்தியை அறிய நேரிட்டது. உடனடியாக பத்திரிகையாளர்களிடம் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினேன்.
4 பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டது தொடர்பாக விமர்சிக்க பாஜகவினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது என்று கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பி உள்ளார்.
Author: செய்திப்பிரிவு