சேலம்: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்துத் துறை பணியளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில், தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில பொன்விழா மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் விஜயகுமாரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி மற்றும் சுரேஷ் பாபு முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டார். மாநாட்டில் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வரும் 28ம் தேதி மாநிலம் தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக, போக்குவரத்துத் துறை பணியளர் ஒன்றிப்பு மாநில சிறப்புத் தலைவர் குரு பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Author: வி.சீனிவாசன்