புதுடெல்லி: "2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13-ல் தொடங்கி ஏப்.6 வரை நடக்க இருக்கிறது. முதல் கூட்டத்தொடர் முடிந்து ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று கூடியது. இரண்டாவது நாளான இன்றும் கூட்டத்தொடர் நடைபெற்றது.
2023-24ம் நிதியாண்டு பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு