ம.பி.,யில் கோவில் கிணற்று பக்கவாட்டு சுவர் இடிந்தது. இதில் 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ம.பி., மாநிலம் இந்தூரில் உள்ள மகாதேவ் ஜூலேலால் கோவில் உள்ளது. ராமநவமியை முன்னிட்டு 30க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது பாரம் துவங்காமல், கிணற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.
அதில் அங்கிருந்தவர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து வந்து, மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 2 பெண்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 17 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடைபெற்று வருகிறது.
உயிரிழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.