Advertisement
சென்னை: அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கான தேர்வு ஏப்.25-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தின விழா சைதாப்பேட்டையில் நேற்று நடந்தது. விழாவில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். சென்னை மாநகராட்சி 10-வது மண்டல குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள 1,021 மருத்துவர் இடங்களுக்கான தேர்வு ஏப்.25-ம் தேதி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு
Advertisement