புதுடெல்லி: மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு (சிஏடி) நாடாளுமன்றக் குழு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு காணப்படாமல் 1,350 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஓய்வூதியம் மற்றும் மூத்த குடிமக்கள் தொடர்பான வழக்குகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிய தீர்வு காணப்பட வேண்டும். இந்த தீர்ப்பாயத்தின் வெவ்வேறு அமர்வுகளில் 80,545 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (செயல்முறை) விதிகள், 1987-ன் படி, ஒவ்வொரு விண்ணப்பமும் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முடிந்தவரை விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட வேண்டும் என்பது விதிமுறை.
மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு (சிஏடி) நாடாளுமன்றக் குழு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பத்து ஆண்டுகளுக்கும் மேலாகதீர்வு காணப்படாமல் 1,350 வழக்குகள் நிலுவையில் உள்ளன
Author: செய்திப்பிரிவு