சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், ஆதார் பதிவு மையங்களுக்கு சென்றும் அட்டையை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா சேவை மற்றும் பலன்களை பெற மக்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இதனை மேற்கொள்ள ரூ.25 மற்றும் ஆதார் பதிவு மையத்தின் மூலம் இந்த பணிக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செய்திப்பிரிவு