சென்னை: தமிழகம் முழுவதும் ஹிஜாவு, ஆருத்ரா உட்பட 4 நிதி நிறுவனங்கள், பொதுமக்களிடம் முதலீட்டுதொகை பெற்று ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்திருந்தது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் முதலீடு செய்த தொகையை மீட்டுதருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் உறுதி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் ஐஜி ஆசியம்மாள் கூறியதாவது: அதிக வட்டித் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் அதிகளவில் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன. முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 25முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று அந்நிறுவனங்கள் ஏமாற்றி உள்ளன.
அதிக வட்டித் தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி பொதுமக்களிடம் அதிகளவில் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன.
Author: செய்திப்பிரிவு