ஹரியாணாவில் அரிசி அரவை மில்லில் மேற்கூரை இடிந்துவிழுந்து விபத்து: 4 தொழிலாளர்கள் பலி

5

ஹரியாணா: ஹரியாணா மாநிலத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலையில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஹரியாணா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில், "கர்னல் மாவட்டத்தின் தரோரி கிராமத்தில் உள்ளது சிவ் சக்தி அரிசி அரவை மில். 3 அடுக்குமாடி கொண்ட இந்த ஆலையில் ஊழியர்கள் ஒரு தளத்தில் தங்கியுள்ளனர். நேற்று வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு ஊழியர்கள் ஆலையில் அவர்கள் தங்கும் தளத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கட்டத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவருமே புலம்பெயர்ந்த தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணா மாநிலத்தில் தனியாருக்குச் சொந்தமான அரிசி அரவை ஆலையில் கட்டட மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.