புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் புதுச்சேரி நாட்டிலேயே பின்தங்கிய நிலையில் உள்ளது. தேர்வாகி ஆறு ஆண்டுகளாகியும் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டே உள்ள சூழலில் வரும் ஜூனுடன் இதற்கான காலக்கெடு முடிகிறது
நாடு முழுவதும் இத்திட்ட செயல்பாடான தரவரிசையிலும் புதுச்சேரி செயல்திறன் திருப்தியாக இல்லை என்றும், மத்திய அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு நகரங்கள் தேர்வாகியுள்ளன. பல நகரங்கள் இத்திட்டத்தில் மேம்பட்டுள்ளன. இத்திட்டத்தில் புதுச்சேரியும் தேர்வாகி ஆறு ஆண்டுகளாகியுள்ளது. புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் லிமிடெட் (பி.எஸ்.சி.டி.எல்.) வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்தவில்லை.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்துவதில் நாட்டிலேயே பின்தங்கிய நிலையில் புதுச்சேரி உள்ளது. தேர்வாகி ஆறு ஆண்டுகளாகியும் முக்கியத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டே உள்ள சூழலில் வரும் ஜூனுடன் இதற்கான காலக்கெடு முடியும் சூழல் உள்ளது
Author: செ.ஞானபிரகாஷ்