புதுச்சேரி: ஓராண்டுக்குள் முடிப்பதாக தொடங்கி,2 ஆண்டுகளை கடந்தும் ‘ஸ்மார்ட் சிட்டி’திட்டத்தில் புதுச்சேரி அண்ணா விளை யாட்டு அரங்க கட்டுமான பணி நடை பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மிக தாமதமாவதால் அரங்கைச் சுற்றி வியாபாரிகள் கடைகளை அமைத்து விட்டனர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளில் பல முக்கிய அரசுப் பள்ளிகளுக்கான விளை யாட்டுத் திடலாக திகழந்தது அண்ணா விளையாட்டு திடல். ஒரு கட்டத்தில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு இவ்விளையாட்டு திடல் பயன்படுத்தப்பட்டதை விட தனியார்பொருட்காட்சிகள், கூட்டங்கள் நடத்தவேஅதிகம் பயன்படுத்தப்பட்டது. விளையாட் டுத் திடலைத் சுற்றி குபேர் பஜாரும் இயங் கியது.
ஓராண்டுக்குள் முடிப்பதாக தொடங்கி,2 ஆண்டுகளை கடந்தும் ‘ஸ்மார்ட் சிட்டி’திட்டத்தில் புதுச்சேரி அண்ணா விளை யாட்டு அரங்க கட்டுமான பணி நடை பெறாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மிக தாமதமாவதால் அரங்கைச் சுற்றி வியாபாரிகள் கடைகளை அமைத்து விட்டனர்.
Author: செ. ஞானபிரகாஷ்