புதுடெல்லி: டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அனைத்து மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: வெளிநாடுகளில் தங்கி பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அதனை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் தங்கி பணியாற்றும் அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட காலத்தையும் தாண்டி தங்கியுள்ளதை தவிர்க்க வேண்டும்.
டெபுடேஷனில் வெளிநாடுகளுக்கு சென்று பணியாற்றும் அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்தை தாண்டியும் அங்கு தங்கியிருந்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
Author: செய்திப்பிரிவு