விலகிய தடைகள்… எடப்பாடி வசமான அதிமுக! – OPS அடுத்த மூவ் என்ன? அதானி பங்குகளில் EPFO … ஆபத்தா?

16

விலகிய தடைகள்… EPS  வசமான அதிமுக!  

எடப்பாடி கே பழனிசாமி!

சென்னை உயர் நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக இன்று அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியிருக்கிறது.

இது தொடர்பாக ஓ. பன்னீர் செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை இல்லை என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

சிலுவம்பட்டியில் சாதாரண கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் மாளிகையின் அதிகார பீடத்தை அடைந்துள்ளார்.

சிலுவம்பட்டியில் சாதாரண கிளைச் செயலாளராக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர் மாளிகையின் அதிகார பீடத்தை அடைந்த கதையை

விரிவாக வாசிக்க இங்கே க்ளிக் செய்க..

ஓபிஎஸ் மனுக்களைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

படிக்க இங்கே க்ளிக் செய்க…

பன்னீர் செல்வத்தின் 10-வது தோல்வி – அடுத்த மூவ் என்ன?!

பன்னீர்செல்வம்

திமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இன்று பொறுப்பேற்பதற்கான தடைகள் அனைத்தும் நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து விலகிவிட்டன. இது பன்னீருக்கு அடுத்த தோல்வியாக பார்க்கப்படுகிறது.

பன்னீர் செல்வத்தின் தொடர் தோல்விகள் மற்றும் அவரது அடுத்த ‘மூவ்’ உள்ளிட்ட விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

பற்களைப் பிடுங்கிய ஏஎஸ்பி-யை விசாரிக்க ம.உ.ஆ  உத்தரவு!

ஏ.எஸ்.பி பல்பீர் சிங்

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சரகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்தவர், பல்பீர் சிங் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் புகாருக்குள்ளானவர்களின் பற்களைப் பிடுங்கி அவர்களுக்கு தண்டனை கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

இது குறித்த விரிவான தகவல்களைப் படிக்க இங்கே க்ளிக் செய்க…

காங்கிரஸுடன் கைகோத்த 17 எதிர்க்கட்சிகள்… மம்தா இன்; உத்தவ் அவுட்! – நடந்தது என்ன?!

எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டிருக்கின்றன. நேற்று இரவு காங்கிரஸ் உட்பட 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினர்.

எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு கார்கே இரவு விருந்து கொடுத்தார். இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்க…

அதானி பங்குகளில் EPFO முதலீடு… தொழிலாளர் பணத்துக்கு ஆபத்தா?

சரிவில் அதானி

தானி குழும நிறுவனங்கள் மீதான புகார்களும் சர்ச்சையும் இன்னமும் தொடர்கிறது.

ஆனாலும் அதானி நிறுவனப் பங்குகளில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையமான இ.பி.எஃப்.ஓ (EPFO) தொடர்ந்து முதலீடு செய்து வருவதாகத் வெளியாகியிருக்கும் தகவல் தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன..?

விரிவாக படிக்க இங்கே க்ளிக் செய்க…

வெந்தயம்: சமைக்கப்பட்ட இரும்பு!

வெந்தயம்

‘வெந்த’ என்றால் ‘வேக வைக்கப்பட்ட’ என்று பொருள். ‘அயம்’ என்பது இரும்புக்கான தமிழ் கலைச்சொல். வெந்தயம் என்றால் `சமைக்கப்பட்ட இரும்பு’ என்பது பொருள். அந்தளவுக்கு இதில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

ஒரு பொருள்… பல பயன்கள் வரிசையில் சித்த மருத்துவர் பி. மைக்கேல் செயராசு சொல்லும் வெந்தயத்தின் மகிமையைத் தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

இசை வரலாற்றின் இணையற்ற கர்ஜனை!

டி.எம்.எஸ்

ந்த ஆண்டு, டி.எம்.எஸ்-ஸின் நூற்றாண்டு. சென்னை, மந்தைவெளியில் அவர் வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவருடைய பெயரைச் சூட்டி பெருமை சேர்த்திருக்கிறது தமிழக அரசு. அவர் பிறந்த மதுரையில் உருவச்சிலை அமைக்கும் வேலைகளும் நடக்கின்றன.

60 ஆண்டுக்கால இசைப்பயணம், 10,000-க்கும் மேற்பட்ட பாடல்கள், 3,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையும் குரலும் என… இந்த இசை வரலாற்றின் கர்ஜனை இணையற்றது.

டி.எம்.எஸ்-ஸின் திரைப்பட வாழ்க்கை குறித்த சுவாரஸ்யங்களுடன் கூடிய விறுவிறுப்பான கட்டுரையை வாசிக்க இங்கே க்ளிக் செய்க…

இந்த வாரம் என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம்.

தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்க…

 

Author: Mukilan P

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.