அமெரிக்க புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவின் அதானி குழும நிறுவனத்தைத் தொடர்ந்து அடுத்து ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்துக்கு எதிராய் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை
அமெரிக்காவைச் சேர்ந்த புலனாய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் இந்தியாவில் செயல்படும் அதானி குழுமம், வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தெரிவித்திருந்தது. இதுகுறித்து அந்த அறிக்கை, “அதானி குழுமம் மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் போலி நிறுவனங்களை நடத்தி வரி ஏய்ப்பு செய்துள்ளது” என தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்குகள், அடிப்படையில் 85 சதவீதம் பின்னடைவைக் கொண்டுள்ளன எனவும் அது தெரிவித்திருந்தது. அதானி குழுமத்தின் முன்னாள் நிர்வாகிகள், ஆவணங்களின் பகுப்பாய்வு உள்ளிட்ட ஆராய்ச்சியின் அடிப்படையிலேயே இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அது கூறியிருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பதில் அளித்த அதானி குழுமம்
இந்த அறிக்கையால் அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் கடும் சரிவைச் சந்தித்தன. இதற்கு அதானி குழுமம், “இந்த அறிக்கை தவறானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கொண்டுள்ளது” எனத் தெரிவித்திருந்ததுடன், “அதானி குழுமத்தின் மதிப்பைக் குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டிருக்கிறது. ஆகையால் ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தது. இதற்குப் பதில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பர்க், “நாங்கள் அறிக்கை வெளியிட்டு 36 மணி நேரம் கடந்த பிறகும், நாங்கள் கேள்வி எழுப்பிய எதற்கும் அதானி நிறுவனம் இதுவரை பதில் அளிக்கவில்லை. அதேநேரத்தில், அதானி நிறுவனம் மேற்கொள்ளும் சட்டரீதியான எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தாங்கள் தயாராக இருக்கிறோம். ஆய்வறிக்கையில் நாங்கள் குறிப்பிட்ட எந்த ஒரு தகவலுக்கும் முழுப் பொறுப்பு ஏற்கிறோம்” என தெரிவித்திருந்தது.
ஹிண்டன்பர்க் அறிக்கையால் சரிந்த அதானி குழுமம்
ஹிண்டன்பர்க் அறிக்கையால் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்த அதானி, அதிலிருந்து விறுவிறுவென சரிந்தார். அதுபோல், ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற இடத்தையும் இழந்தார். FPO விற்பனை மூலம் திரட்டப்பட்ட 20,000 கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தந்து வீழ்ச்சியைச் சந்தித்தார். தொடர் சரிவுகளால் முன்கூட்டியே கடனைச் செலுத்தும் நிலைக்கு அதானி தள்ளப்பட்டார். இப்படி, ஹிண்டன்பர்க்கின் ஒரெயொரு அறிக்கையால், பல்வேறு இன்னல்களுக்கு ஆளான அதானி குழுமம், தற்போது அதிலிருந்து மீண்டுவர முயல்கிறது.
என்றபோதிலும் ஹிண்டன்பர்க், ஃபோர்ப்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து அதானிக்கு எதிராக அடுத்தடுத்து ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அதானி குழும முறைகேடு குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. முக்கியமாக கடந்த ஆண்டு 100 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்புடன் ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக இருந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பு தற்போது வெறும் 50 பில்லியன் டாலராக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானி குழுமத்துக்கு அடுத்த நிறுவனத்தை அம்பலப்படுத்தப்போகும் ஹிண்டன்பர்க்
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் மேலும் ஒரு பெரிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தப் போவதாக இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தன்னுடைய ட்விட்டரில், New Report Soon – another big one என்று பதிவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த பெரிய நிறுவனம் எது என்ற கேள்வி அனைத்து முன்னணி நிறுவனங்கள் மத்தியிலும் எழுந்துள்ளது.
New report soon—another big one.
— Hindenburg Research (@HindenburgRes) March 22, 2023
அதில் இந்திய நிறுவனம் குறித்து இருக்குமா அல்லது அமெரிக்க வங்கிகள் குறித்து இருக்குமா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. என்றாலும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட, பிரபலமான அதேநேரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிறுவனங்களைத்தான் ஹிண்டன்பர்க் குறிவைத்திருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
30 நிறுவனங்களை அம்பலப்படுத்திய ஹிண்டன்பர்க்
2017ஆம் ஆண்டு நாதன் ஆண்டர்சன் என்பவரால் நிறுவப்பட்ட ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், 2020ஆம் ஆண்டு முதல் 30 நிறுவனங்களின் ஆய்வு அறிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான அடுத்த நாளிலேயே அந்த நிறுவனங்களின் பங்குகள் சராசரியாக 15% சரிந்தன என்றும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது. 2020ஆம் ஆண்டு நிகோலா எலெக்ட்ரிக் ட்ரக் நிறுவனம் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது முதல் ஹிண்டன்பர்க் உலகளவில் பிரபலமானது. இந்த ஆய்வறிக்கை மூலம், அந்த நிறுவனம் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஜெ.பிரகாஷ்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Author: Web Team