Advertisement
விருதுநகர்: விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை மிளகாய் மண்டலமாக தமிழக அரசு அறிவித்துள்ளதை விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
பச்சை மிளகாய் உற்பத்தியில் சீனா முதலிடத்திலும், வரமிளகாய் (வத்தல்) உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் உள்ளது. இந்தி யாவில் ஆந்திரா, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிளகாய் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் 44,610 ஹெக்டேரில் 2,939 மெ.டன் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் அக்டோபர், நவம் பர் மாதங்களில் நாற்றாங்கல் நடவு செய்யப்பட்டு மார்ச் இறுதியில் அறுவடை செய்யப்படுவது வழக்கம்.
Author: இ.மணிகண்டன்
Advertisement