Advertisement
விருதுநகர்: விருதுநகரில் காயமடைந்து 75 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா (65) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த சேக் முகமது என்பவருக்குச் சொந்தமான 65 வயதான லலிதா என்ற பெண் யானை கடந்த ஜனவரி 2ம் தேதி விருதுநகரில் ஒரு பெருமாள் கோயிலுக்கு சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்கு கொண்டுவரப்பட்டது. லாரியிலிருந்து கீழே இறக்கியபோது பக்கவாட்டில் சரிந்து விழுந்து யானை பலத்த காயமடைந்தது.
விருதுநகரில் காயமடைந்து 75 நாள்களுக்கும் மேலாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த யானை லலிதா (65) இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Author: இ.மணிகண்டன்
Advertisement