Advertisement
இஸ்லாமாபாத்: பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாகபாகிஸ்தான் அமைச்சர்கள் அலுவலக ரீதியாக பயணம் செல்லும்போது, விமான பிசினஸ் வகுப்புகளில் பயணிக்கவும், 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர்களின் ஊதியத்தையும் குறைக்க பிரதமர்ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அமைச்சர்கள், அரசு ஆலோசகர்களின் செலவுகளை 15 சதவீத அளவுக்கு குறைத்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் கோடி அளவுக்கு மீதப்படுத்த பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் பாகிஸ்தான் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை கையாண்டுவருகிறது.
Author: செய்திப்பிரிவு
Advertisement