கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதியும் மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்க்கட்சிகளும் அந்நாட்டில் முன்னெடுத்திருக்கிறார்கள். டெல் அவிவ் உட்பட நாட்டின் பல முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திக் கொண்டிருக்கும் இப்போராட்டங்கள் ‘இஸ்ரேலில் என்ன நடக்கிறது..?’ என உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
ஏன் இந்த போராட்டம்? – இஸ்ரேலில் நீதித் துறை அமைப்பை மாற்றியமைப்பதற்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு ஈடுபட்டு வருகிறார். அதாவது, நீதித் துறையின் அதிகாரத்தை கட்டுப்படுத்தவும், நீதித் துறை அதிகாரத்திற்கும், அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சமநிலையை மீட்டெடுக்கவும் நீதித் துறையில் மாற்றம் கொண்டுவருவதாகச் சொல்லி, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மேற்கொண்ட முயற்சிகள்தான் தற்போது அவருக்கு எதிராக திரும்பி இருக்கிறது.
கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வரலாற்றில் பதிவும் செய்யும்படியான மாபெரும் போராட்டத்தை இஸ்ரேல் மக்களும், எதிர்கட்சிகளும் அந்நாட்டில் நடத்தி வருகின்றன.
Author: இந்து குணசேகர்