புதுடெல்லி: சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில், பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை நீதித் துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதன் காரணமாக, கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதி எம்.பி. பதவியையும் அவர் இழந்துள்ளார்.
சிறைக்கு செல்ல அஞ்சவில்லை. சிறையில் அடைத்தாலும், தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பேன். வாழ்நாள் முழுவதும் தடை விதித்தாலும், மக்களுக்காக தொடர்ந்து குரல் எழுப்புவேன் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு