மதுரை: மதுரை – திண்டுக்கல் ரயில் பாதை பிரிவில் கூடல் நகர் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் (எல்சி எண் 358, பாப்பாகுடி கேட்) சிக்னல் இன்டர்லாக் செய்யப்பட்ட ஆக்சிலரி ஸ்லைடிங் பூம்கள் நிறுவப்பட்டுள்ளது. இவ்வசதி தொழில்நுட்பக் கோளாறு, வாகனங்களாலும் கேட்டிற்கு சேதம் ஏற்படும்போது கேட்டின் செயல்பாடு எளிமையாக்கப்படும் என, கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியது: இத்தொழில்நுட்பம் மதுரை கோட்டத்தில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. மதுரையில் – திண்டுக்கல் ரயில் பாதையில் மேலும் 6 லெவல் கிராசிங் கேட்களில் இந்த தொழில்நுட்பம் இன்னும் இரண்டு மாதங்களில் நிறுவப்படும்.
மதுரை – திண்டுக்கல் ரயில் பாதை பிரிவில் கூடல் நகர் அருகிலுள்ள லெவல் கிராசிங்கில் (எல்சி எண் 358, பாப்பாகுடி கேட்) சிக்னல் இன்டர்லாக் செய்யப்பட்ட ஆக்சிலரி ஸ்லைடிங் பூம்கள் நிறுவப்பட்டுள்ளது.
என். சன்னாசி