லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் பாதுகாப்பில் அலட்சியம் – பிரிட்டன் தூதரகம், தூதர் இல்லத்தில் தடுப்புகள் அகற்றம்: மத்திய வெளியுறவு துறை பதில் நடவடிக்கை

5

லண்டனில் உள்ள இந்திய தூதரகரத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் பிரிட்டன் தூதரின் இல்லத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை மத்திய அரசு அகற்றியது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்துக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்தனர். இந்திய தூதரக கட்டிடத்தின் முன்புறம் உள்ள கம்பத்தில் இருந்து மூவர்ணக் கொடியை கீழிறக்கினர். மேலும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் கொடியை ஏற்ற முயன்றனர். அதற்குள் தகவல் அறிந்து வந்த லண்டன் போலீஸார் அவர்களை அகற்றினர். இந்தச் சம்பவத்துக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

லண்டனில் உள்ள இந்திய தூதரகரத்தின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததற்கு பதில் அளிக்கும் வகையில், டெல்லியில் உள்ள பிரிட்டன் தூதரகம் மற்றும் பிரிட்டன் தூதரின் இல்லத்துக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடுப்புகளை மத்திய அரசு அகற்றியது

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.