புதுடெல்லி: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கடந்த 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்கும் முயற்சியில் வெளிநாடுவாழ் பஞ்சாபியர்களில் சிலர் முயன்று வருகின்றனர். இந்தியாவில் அவர்களுக்கு ஆதரவாக அம்ரித்பால் சிங் செயல்பட்டு வந்தார். சீக்கிய மத போதகரான அவர் மீது இருந்த வழக்குகள் தொடர்பாக அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் தப்பி ஓடிவிட்டார். எனினும், அவரை கைது செய்வதில் பஞ்சாப் அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பாக கடந்த 19-ம் தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Author: செய்திப்பிரிவு