Advertisement
டெல்லி: லட்சத்தீவு தொகுதி எம்.பி. முகமது பைசலின் தகுதிநீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றது. கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. கவரட்டி நீதிமன்ற தீர்ப்புக்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்ததை தொடர்ந்து எம்.பி. தகுதி நீக்கத்தை ரத்துசெய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. தீர்ப்புக்கு தடைவிதித்து 2 மாதங்களாகியும் தகுதிநீக்க உத்தரவு திரும்பப்பெறாததால் உச்சநீதிமன்றத்தில் பைசல் மனு தாக்கல் செய்திருந்தார். உச்சநீதிமன்றத்தில் முகமது பைசல் மனு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில் தகுதிநீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
Advertisement