புதுடெல்லி: லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக மக்களவை செயலாளர் இன்று (மார்ச் 29) நோட்டீஸ் வெளியிட்டுள்ளார். ஃபைசல் மீதான குற்றவியல் வழக்கின் தண்டனையை நிறுத்திவைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இன்று வெளியிடப்பட்டுள்ள மக்களவை செயலரின் அறிக்கையில், "முகமது ஃபைசல் பி.பி,யின் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு தடைவிதித்து ஜன.25, 2023-ல் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, 2023ம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 102(1)(e), மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 8 படி அறிவிக்கப்பட்ட தகுதி இழப்பு அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்தீவு எம்.பி. முகமது ஃபைசல் பி.பி.-யின் தகுதி இழப்பு நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக நாடாளுமன்ற செயலாளர் இன்று (மார்ச் 29) தெரிவித்துள்ளார். முன்னதாக குற்றவியல் வழக்கின் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்த கேரளா உயர் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Author: செய்திப்பிரிவு