சென்னை: ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னை, கொத்தவால்சாவடி, தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின் புதிய நியாயவிலைக் கடையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று (மார்ச் 17) தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர், "தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகளை அளித்து வருகின்றது. அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும், தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,500 பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
Author: செய்திப்பிரிவு