ராம நவமியில் சர்ச்சைப் பேச்சு: தெலங்கானா பாஜக எம்எல்ஏ ராஜா சிங் மீது வழக்கு

13

புதுடெல்லி: ராம நவமி விழாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் எம்எல்ஏ ராஜா சிங் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153-A (இரு பிரிவினருக்கு இடையே மதம், இனம், பிறப்பிடம், வாழ்விடம், மொழி சார்ந்து வெறுப்பைத் தூண்டுதல்), சட்டப்பிரிவு 506 (குற்ற மிரட்டல்) ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதற்காக ராஜா சிங் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர், கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக மத நல்லெண்ணத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் பேசியதாக பாஜக எம்.எல்.ஏ ராஜாசிங்கை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக பாஜக மேலிடம் அறிவித்தது. இருப்பினும், அவர் தொடர்ந்து தன் கருத்துகளால் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.

ராம நவமி விழாவில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்காக ஹைதராபாத் கோஷாமஹால் தொகுதியின் எம்எல்ஏ., ராஜா சிங் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Author: செய்திப்பிரிவு

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.