ராமேசுவரம்: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. மதுரை வைகை கரை பேச்சி யம்மன் படித்துறையில் 1915-ம் ஆண்டு தேவஸ்தான பாடசாலை தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இது சமஸ்கிருதக் கல்லூரியாக இருந்தது. பின்னர், 1924-ம் ஆண்டு தமிழில் வித்துவான் பிரிவும் தொடங்கப்பட்டது.
1965-ம் ஆண்டு இந்த பாடசாலை மதுரையிலிருந்து ராமேசுவரத்துக்கு மாற்றப்பட்டது. இந்த பாட சாலையில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களும், பழமையான ஓலைச்சுவடிகள் கொண்ட நூலகமும் இயங்கி வந்தது. 1980-களில் பாடசாலையை மூடிய பிறகு நூலகம் மட்டும் இயங்கி வந்தது.
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ள ஓலைச்சுவடிகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. மதுரை வைகை கரை பேச்சி யம்மன் படித்துறையில் 1915-ம் ஆண்டு தேவஸ்தான பாடசாலை தொடங்கப்பட்டது.
Author: செய்திப்பிரிவு