சென்னை: அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வியாழக்கிழமை (16.03.2023) அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ பணியில் ஈடுபட்டிருந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ அலுவலர் மேஜர்.A. ஜெயந்த் உட்பட இரண்டு ராணுவ அலுவலர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்து வெள்ளிக்கிழணை காலை என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தேன்.
அருணாச்சலப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெயந்த்தின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு