புதுடெல்லி: எதிர்க்கட்சி முகாமில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக, காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.மேலும், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்திற்கு எதிராக நடந்த கறுப்பு உடைப் போரட்டத்திலும் கலந்து கொண்டனர்.
சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின் நாடாளுமன்றம் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு கூடியது. அப்போது, ராகுலின் தகுதி நீக்க நடவடிக்கைக்கு எதிராக கறுப்பு உடை போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது. முன்னதாக அதானி, ராகுல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்த ஆலோசிக்க, மாநிலங்களவை எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முதல் முறையாக இந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த ப்ராசன் பானர்ஜி, ஜவஹர் சிர்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எதிர்க்கட்சி முகாமில் ஆச்சரியம் அளிக்கும் விதமாக,காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதல் முறையாக திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Author: செய்திப்பிரிவு