சென்னை: "காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975-ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும்.பாஜக ஆட்சியில் இருப்பதால் நாடும், நாட்டு மக்களும் நெருக்கடி நிலை பயங்கரத்தில் அவதியுறவில்லை" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ராகுல் காந்தியை தண்டித்ததன் மூலம் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. ராகுல் காந்தியை பாராளுமன்ற உறுப்பினராக தகுதி நீக்கம் செய்தது 'சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்ற உண்மையை உணர்த்தியுள்ளது.
காங்கிரஸ் இன்று ஆட்சியில் இருந்திருந்தால், 1975ம் ஆண்டு இதேபோன்று இந்திரா காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவசர நிலையை கொண்டு வந்தது போல் கொண்டு வந்திருக்கும் என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு