புதுடெல்லி: மக்களவைச் செயலகம் தகுதி இழப்பு செய்தது குறித்து நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவையில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பயந்துவிட்டார். அதனால் நான் தகுதி இழப்பு செய்யப்பட்டேன்’’ என கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது: அதானி குழுமத்தின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியதால்தான், மக்களவையில் இருந்து என்னை தகுதி இழப்பு செய்துள்ளனர் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இது பொய்யானது, அடிப்படை ஆதாரமற்றது. அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்துக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொய்யான கருத்துகளை தெரிவித்து விஷயத்தை திசை திருப்ப ராகுல் முயற்சிக்கிறார்.
மக்களவைச் செயலகம் தகுதி இழப்பு செய்தது குறித்து நேற்று பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘‘மக்களவையில் எனது அடுத்த பேச்சு குறித்து பிரதமர் நரேந்திர மோடி பயந்துவிட்டார். அதனால் நான் தகுதி இழப்பு செய்யப்பட்டேன்’’ என கூறினார்.
Author: செய்திப்பிரிவு