புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
முன்னதாக கடந்த வாரம் வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
ராகுல் காந்தி தகுதிநீக்கத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் இன்று (திங்கள்கிழமை) காலை 10.30 மணியவில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
Author: செய்திப்பிரிவு