புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் தொகுதியில் நேற்று கையோடு கை கோர்ப்போம் நடைபயணம் மேற்கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் தலைமை தாங்கினர். இதில் மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மிஷன் வீதியில் புறப்பட்ட நடைபயணம் கடற்கரை சாலை அருகே நிறைவுபெற்றது. பின்னர் நாராயணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது: "குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு காலம் தண்டனை வழங்கப்பட்டது. அதற்கு மறுநாளே எம்பி பதவியில் இருந்து தகுதி இழப்பு செய்திருக்கிறார்கள்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் ராஜ்பவன் தொகுதியில் நேற்று கையோடு கை கோர்ப்போம் நடைபயணம் மேற்கொண்டனர். வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஜெரால்டு, ராஜ்மோகன் தலைமை தாங்கினர்.
Author: அ.முன்னடியான்