புதுடெல்லி: குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை? – ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் கூறியதாவது: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி நீக்கப்பட்டுள்ளார். குஜராத்தின் சூரத் நீதிமன்றம் அவருக்கு ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் பதவி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய முடியும்.
குற்றவியல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு