புதுடெல்லி: பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று (மார்ச் 23) தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று (மார்ச்.24) எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலிருந்து போட்டியிட்டு எம்.பி.யானார். இந்நிலையில், ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் மட்டுமின்றி தேசிய, மாநிலக் கட்சிகள் பலவும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. தமிழகத்தில் கூட்டணிக் கட்சியான திமுகவும் தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
யுத்தம் தொடர்கிறது… – காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தைப் பாதுகாக்க ராகுல் காந்தி தொடர்ந்து போராடுவார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை எடுப்பார்" என்று பதிவிட்டுள்ளது. மேலும், ராகுல் காந்தியின் புகைப்படம் பகிரப்பட்டு அதற்கு 'யுத்தம் தொடர்கிறது' என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து ராகுல் காந்தி இன்று எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Author: செய்திப்பிரிவு