புதுடெல்லி: ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு சம்பவம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், ''அவசரநிலை காலகட்டத்தைப் போன்ற ஒரு நிலையில் நாடு இருக்கிறது. தற்போது இருப்பது அறிவிக்கப்படாத அவசரநிலை. இந்திரா காந்தி காலத்தில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டதாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. தற்போது அதில் வித்தியாசம் ஏதும் இருக்கிறதா? ஊடகங்கள் மற்றும் ஊடகவியாலாளர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்க வேண்டிய நிலை உள்ளது.
ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிப்பு சம்பவம் காங்கிரஸ் கட்சியை மேலும் வலுப்படுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Author: செய்திப்பிரிவு