தூத்துக்குடி: "ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல் காந்திக்கும் அது பொருந்தும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "லட்சத்தீவில் இதேபோல எம்.பி ஒருவருக்கு கொலை வழக்கில் தீர்ப்பு வந்தபோது உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதுபோலத்தான், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வந்தபோது மக்கள் பிரதிநிதி அந்த பதவியில், பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழக்கிறார். உச்ச நீதிமன்றம் ஊர்ஜிதம் செய்ததன் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார்.
ஒரு சாதாரண மனிதனுக்கு எந்த சட்டம் பொருந்துமோ, இந்தியாவின் உச்சபட்ச குடும்பத்தில், காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த ராகுல்காந்திக்கும் அது பொருந்தும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
Author: செய்திப்பிரிவு