ராகுல்காந்திக்கு ஆதரவாக டெல்லியில் அமைதி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது: பெண் நிர்வாகிகளிடம் போலீசார் அத்துமீறல்..!

13

டெல்லி: மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் அமைதி பேரணியில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர், டெல்லியில் செங்கோட்டை பகுதியில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் இரவு 7 மணியளவில் ஒன்று திரண்டனர். எனினும் அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது காவல்துறையினர் தடுப்பு வேலி அமைத்திருந்தனர்பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி காங்கிரஸார் அமைதி பேரணி நடத்த முயன்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் வேனில் ஏற்றி அழைத்து செய்யப்பட்டனர். டெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள டவுன் ஹால் நோக்கி பேரணி புறப்படுவதற்கு முன்னரே காங்கிரஸாரை போலீசார் நிறுத்தியும், கைது செய்தும் தடுத்தனர். காங்கிரஸ் பெண் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றும்போது அவர்களிடம் காவல்துறையினர் தவறாக நடந்துகொண்டதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் பேரணி செல்ல முயன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், ஹரிஷ் ராவத், கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சௌத்திரி உள்ளிட்ட ஏராளமானோரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.