புதுடெல்லி: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளும் கட்சி மதிப்பளிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார். பாஜகவை விமர்சிக்கும் வகை யில் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். தவிர நாட்டுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Author: செய்திப்பிரிவு